பூங்கா உரிமையாளரின் கழுத்தை கவ்வி இழுத்து சென்ற சிங்கம்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

தென்னாப்பிரிக்காவில் உள்ள தபாஸ்ம்பி என்ற பகுதியில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றின் உரிமையாளரான மைக் ஹோட் என்பவரை அந்த பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று கழுத்தை கவ்வி இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷம்பா என்ற அந்த சிங்கம் நேற்று பார்வையாளர்களின் பகுதிக்கு வந்தது. அப்போது பார்வையாளர்கள் அந்த சிங்கத்தை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். அந்த சமயம் பூங்கா உரிமையாளர் மைக் ஹோட்ஜ் பூங்காவில் சிங்கம் இருக்கும் பகுதிக்கு அருகே சென்றார். இந்த நிலையில் திடீரென பூங்கா உரிமையாளர் மைக் ஹோட்ஜை சிங்கம் விரட்டியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்ஜ், சிங்கத்திடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் 72 வயது ஹோட்ஜால் வேகமாக ஓட முடியாததால் சிங்கம் அவருடைய கழுத்தை கவ்வி பிடித்து மறைவான புதர் ஒன்றுக்கு இழுத்து சென்றது. இதனையறிந்த பூங்கா காவலர்கள் சிங்கத்தை துப்பாக்கியால் சுட்டு படுகாயம் அடைந்த ஹோட்ஜை காப்பாற்றினர். தற்போது ஹோட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

தனுஷ் நாயகியின் திருமண தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படமான 'ராஜண்ணா' படத்தின் நாயகியும், பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூரின் மகளுமான சோனம்கபூரின் திருமண தேதி அதிகாரபூர்வமாக கபூர் குடும்பத்தினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வைரலாகும் ரஜினியின் சூப்பர் ஸ்டைல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்பது தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது

விஜய் இடத்தை விஜய் ஆண்டனி பூர்த்தி செய்தார்: எஸ்.ஏ.சந்திரசேகர்

சமூக போராளியான டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை எஸ்.ஏ.சியின் உதவியாளர் விக்கி இயக்குகிறார் என்பதும் தெரிந்ததே.

பிளாட்பாரத்தில் வசிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகள்

நடிகர் ஜாக்கிசான் தான் மகள் எட்டா சோக்லாம் தங்குவதற்கு இடமின்றி தோழியுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருகிறார்.