பூங்கா உரிமையாளரின் கழுத்தை கவ்வி இழுத்து சென்ற சிங்கம்: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னாப்பிரிக்காவில் உள்ள தபாஸ்ம்பி என்ற பகுதியில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றின் உரிமையாளரான மைக் ஹோட் என்பவரை அந்த பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று கழுத்தை கவ்வி இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஷம்பா என்ற அந்த சிங்கம் நேற்று பார்வையாளர்களின் பகுதிக்கு வந்தது. அப்போது பார்வையாளர்கள் அந்த சிங்கத்தை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தனர். அந்த சமயம் பூங்கா உரிமையாளர் மைக் ஹோட்ஜ் பூங்காவில் சிங்கம் இருக்கும் பகுதிக்கு அருகே சென்றார். இந்த நிலையில் திடீரென பூங்கா உரிமையாளர் மைக் ஹோட்ஜை சிங்கம் விரட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்ஜ், சிங்கத்திடம் இருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் 72 வயது ஹோட்ஜால் வேகமாக ஓட முடியாததால் சிங்கம் அவருடைய கழுத்தை கவ்வி பிடித்து மறைவான புதர் ஒன்றுக்கு இழுத்து சென்றது. இதனையறிந்த பூங்கா காவலர்கள் சிங்கத்தை துப்பாக்கியால் சுட்டு படுகாயம் அடைந்த ஹோட்ஜை காப்பாற்றினர். தற்போது ஹோட்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout