ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த அந்த 'பெரிய நடிகர்' யார்?

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையிலான நடிகைகள் தங்களை படுக்கைக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்ததாக மீடூ குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஸ்ரீரெட்டி, சின்மயி உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கூறிய மீடூ குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகை ஷாலு ஷம்மு இணைந்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவரது பதிவு ஒன்றில், ‘பெரிய நடிகர்களின் படங்களில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தவறினால் அவர்களின் திறமை நிராகரிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தான் மீடூவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய்தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மீண்டும் அவர் அதே குற்றச்சாட்டை கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஷாலு ஷம்மு குற்றஞ்சாட்டிய அந்த ‘பெரிய நடிகர்’ யார் என்பதே தற்போதைய நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’மிஸ்டர் லோக்கல்’ உள்பட சில படங்களில் நடித்திருந்த நடிகை ஷாலு ஷம்மு, சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது