அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி.. இதுதான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்துக்கு, அவரது மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவராக விளங்கும் அஜித், தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் தீபாவளி மற்றும் பொங்கல் தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு பக்கம் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்; இன்னொரு பக்கம் பைக் பயணம், கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் அஜித் கலந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி, அஜித் சமீபத்தில் கார் ரேசிங் அணியையும் தொடங்கியுள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் டபியூ இந்த அணியின் அதிகாரப்பூர்வ ரேசிங் ஓட்டுனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் ஏற்கனவே தெரிந்தது.
மேலும், ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் அஜித் மற்றும் அவரது அணி கலந்து கொள்ள உள்ளது. இதற்கிடையில், அஜித்தின் மனைவி ஷாலினி, இன்ஸ்டாகிராமில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்: "கார் ரேசிங்கில் மீண்டும் களமிறங்குவதை பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் விரும்புவதை செய்கிறீர்கள், உங்களுக்கும் உங்கள் அணிக்கும் எனது வாழ்த்துக்கள்," என்று தெரிவித்துள்ளார். ஷாலினியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments