close
Choose your channels

மருத்துவமனையில் ஷாலினி.. அருகில் அன்புடன் அஜித்.. அப்ப சர்ஜரி உண்மைதானா?

Wednesday, July 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் நேற்று திடீரென அவர் சென்னை திரும்பினார் என்பதும் தனிப்பட்ட சில பணிகளுக்காக அவர் சென்னை திரும்பி இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்றுமுன் ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அறுவை சிகிச்சை முடிந்து உட்கார்ந்திருக்கும் ஷாலினி கையை அன்புடன் அஜித் பிடித்து இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’அன்பு எங்கும் பரவட்டும் ’என்று ஷாலினி பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த பதிவுக்கு கமெண்ட்களாக விரைவில் ஷாலினி அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பதிவில் அவரது கையில் மருத்துவமனையின் அடையாள அட்டையை பார்க்கும் போது ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது உண்மைதான் என தெரிய வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment