மருத்துவமனையில் ஷாலினி.. அருகில் அன்புடன் அஜித்.. அப்ப சர்ஜரி உண்மைதானா?

  • IndiaGlitz, [Wednesday,July 03 2024]

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் நேற்று திடீரென அவர் சென்னை திரும்பினார் என்பதும் தனிப்பட்ட சில பணிகளுக்காக அவர் சென்னை திரும்பி இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும் இதனால் அவரை பார்ப்பதற்காக தான் அஜித் சென்னை திரும்பினார் என்றும் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்றுமுன் ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அறுவை சிகிச்சை முடிந்து உட்கார்ந்திருக்கும் ஷாலினி கையை அன்புடன் அஜித் பிடித்து இருப்பது போன்று உள்ளது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’அன்பு எங்கும் பரவட்டும் ’என்று ஷாலினி பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த பதிவுக்கு கமெண்ட்களாக விரைவில் ஷாலினி அவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பதிவில் அவரது கையில் மருத்துவமனையின் அடையாள அட்டையை பார்க்கும் போது ஷாலினிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது உண்மைதான் என தெரிய வருகிறது.

 

More News

ஜூலையில் சூர்யா ரசிகர்களுக்கு ட்ரிபிள் விருந்து.. திகட்ட திகட்ட அப்டேட்டுகள்..!

ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாள் வர இருப்பதை அடுத்து இந்த மாதம் அவருடைய மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மார்பக புற்றுநோயால் போராடும் நடிகை.. சமந்தா கூறிய தன்னம்பிக்கை வார்த்தைகள்..!

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகைக்கு சமந்தா கூறிய தன்னம்பிக்கையான வார்த்தைகள் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. தமிழக அரசுக்கு ஆதரவு.. ஒன்றிய அரசு என பேச்சு.. அனல் பறந்த விஜய்யின் பேச்சு..!

தளபதி விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவது மற்றும் மாநில அரசின் தீர்மானத்திற்கு

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார் வெப்சீரிஸ்.. அசத்தலான டீசர் ரிலீஸ்.!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார்  ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் அசத்தலான டீசரை வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தில் இந்த பிரபலம் தான் வில்லன்? ஆச்சரிய தகவல்..!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக