அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த விலை உயர்ந்த பரிசு.. இத்தனை லட்சம் மதிப்பா?

  • IndiaGlitz, [Wednesday,May 01 2024]

நடிகர் அஜித் இன்று தனது 53 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் சமூக வலைதளங்களில் அஜித் பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது என்பதும் தெரிந்து குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி, அஜித்துக்கு இன்று விலை உயர்ந்த பரிசாக தனது கணவரின் பிறந்தநாளுக்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்யும் திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில் அஜித்துக்கு விலை உயர்ந்த டுகாட்டி பைக்கை ஷாலினி பரிசாக தந்துள்ளதாகவும் இந்த பைக்கின் விலை பல லட்சங்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த பைக் குறித்த புகைப்படம் ஷாலினி அஜித்தின் சமூக வலைதளத்தில் பதிவாகியுள்ளது என்பதும் அதேபோல் ஷாலினி, அஜித் உடன் பிறந்த நாள் கொண்டாடும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் தற்போது ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.