ஷாலினிக்கு கொடுத்த அன்பு முத்தம்.. இதை விட விலை உயர்ந்த பரிசு வேறு என்ன உள்ளது?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் மனைவி ஷாலினிக்கு அவரது மகன் ஆத்விக் கொடுத்த முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதை விட ஒரு அம்மாவுக்கு விலை உயர்ந்த பரிசு வேற என்ன உள்ளது என்று நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றன.
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பதும் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படம், குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார் என்பது தெரிந்தது.
சமீபத்தில் கூட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை வந்து பார்த்து கையைப் பிடித்துக் கொண்டு நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் சற்று முன் தனது மகன் ஆத்விக் நெற்றியில் அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஷாலினி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
’அம்மா மகன் பாசத்துக்கு உலகில் ஈடு இணை எதுவும் இல்லை’, ’ஒரு தாய்க்கு இதைவிட மிகப்பெரிய பரிசு வேற எதுவும் இல்லை’ என்றும் பல்வேறு கமெண்ட் பதிவாகிறது. இந்த புகைப்படத்தை ஒரு மணி நேரத்துக்கு முன் ஷாலினி பதிவு செய்த நிலையில் அதற்குள் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout