என்ன ஒரு அழகான ஓவியம்.. ஷாலினி சகோதரி ஷாம்லிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Saturday,August 05 2023]

நடிகையும் ஷாலினி அஜித்தின் சகோதரியுமான ஷாம்லி வரைந்த புதிய ஓவியம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது

தமிழ் சினிமாவில் ’அஞ்சலி’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று வயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவர் ஷாம்லி. துர்கா, செந்தூர தேவி உள்பட பல திரைப்படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை ஷாம்லி ஓவியம் வரைவதில் திறமையானவர் என்பதும் அவரது ஓவிய கண்காட்சி துபாய் உள்பட பல பகுதிகளில் நடந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. துபாயில் ஷாம்லியின் ஓவிய கண்காட்சி நடந்த போது அஜித் தன் மனைவியுடன் சென்றிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஷாமிலி சமீபத்தில் வரைந்த புதிய ஓவியம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு அழகான பெண்ணின் பின் நிற்கும் குதிரை அமைப்பு கொண்ட இந்த ஓவியத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவித்து வருகின்றனர்

More News

சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் வாங்கினேனா? நெட்டிசன்களை விளாசும் சமந்தா..!

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில் சமந்தா தனது மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக பிரபல நடிகர் ஒருவரிடம் 25 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக செய்திகள் வெளியாகி

கங்கனா ரனாவத் 'சந்திரமுகி' லுக்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!

ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'மெளனகுரு' சாந்தகுமாரின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

அருள்நிதி நடித்த 'மௌனகுரு' மற்றும் ஆர்யா நடித்த 'மகா முனி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாந்தகுமாரின் மூன்றாவது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்

நண்பன் என்டர்டெயின்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம் ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன்

சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தின் நாயகி இந்த பிரபலமா?சூப்பர் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 21' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாக