முதல் நாளே 'விக்ரம்' படத்தை மகளுடன் பார்த்த ஷாலினி அஜித்: என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ‘விக்ரம்’ படத்தை பார்த்து தங்களது சமூக வலைதளங்களில் இந்த படத்தை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், பகத் பாசில், அனிருத் ஆகியோருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபலங்களின் படங்கள் ரிலீசாகும் போது முதல் நாளே பார்த்துவிடும் ஷாலினி அஜித் நேற்று ‘விக்ரம்’ படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு தனது மகளுடன் வந்தார். அப்போது ’படம் எப்படி இருக்கு மேடம்’ என்று ஒருவர் கேள்வி கேட்டபோது ’இப்போதுதான் படம் பார்க்க போகிறோம்’ என்று அவர் பதிலளித்தார். இதனையடுத்து அவர் மகளுடன் ‘விக்ரம்’ படத்தை ரசித்து பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments