சமூக வலைத்தளத்தில் ஷாலினி அஜித்.. முதல் போஸ்ட் என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Sunday,November 27 2022]
நடிகர் அஜித் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதும் அநேகமாக எந்த சமூக வலைதளங்களிலும் இல்லாத ஒரே மாஸ் நடிகர் அஜித் ஆகத்தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை தொடங்கி உள்ளார். சமீபத்தில் அவர் புதிய கணக்கை தொடங்கிய நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 24 ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
மேலும் சமீபத்தில் அஜித் தனது திருமண நாளை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷாலினி அஜித் தனது முதல் போஸ்டர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அஜித் நடித்த திரைப்படங்களின் அப்டேட்கள், அஜித்தின் பைக் பயணங்கள் குறித்து ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.