தனது பெயரை தவறாக பயன்படுத்திய மர்ம நபர்.. எச்சரிக்கை விடுத்த ஷாலினி அஜித்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் பெயரை மர்ம நபர் ஒருவர் தவறாக பயன்படுத்தியதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமா பிரபலங்களின் பெயரில் போலி சமூக வலைதள பக்கங்கள் ஆரம்பித்து உண்மையான பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் போலவே சில மர்ம நபர்கள் கையாண்டு வருகின்றனர் என்பதும் அந்த பக்கத்தை உண்மையான பிரபலங்களின் பக்கம் என்று எண்ணி ஏராளமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு வழியில்லை என்பதால் சம்பந்தப்பட்ட பிரமுகர்கள் அவ்வப்போது தங்களது உண்மையான சமூக வலைதள பக்கங்களில் இருந்து போலி பக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் பெயரில் போலியான எக்ஸ் பக்கம் ஒன்றை ஆரம்பித்த மர்ம நபர் அதில் சுமார் 80,000 ஃபாலோயர்களை பெற்றுள்ள நிலையில் இது குறித்து ஷாலினி அஜித்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதை இடத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போலியான எக்ஸ் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்-ஐ பதிவு செய்து இது தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கம் இல்லை என்றும் எனவே இந்த பக்கத்தை ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் தனது ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த பதிவுக்கு பாசிட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com