'விஸ்வாசம்' படம் பார்த்த ஷாலினி அஜித்! வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,January 05 2019]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருப்பதால் அஜித் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக 'விஸ்வாசம்' திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கான டிக்கெட்டுக்கள் முன்பதிவு தொடங்கப்பட்டு முதல் நாள் காட்சிகள் மின்னல் வேகத்தில் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிஅஜித் நேற்று நுங்கம்பாகத்தில் உள்ள ஒரு பிரிவியூ திரையரங்கில் 'விஸ்வாசம்' படத்தை பார்த்தார். அவருடன் இயக்குனர் சிவா, இசையமைப்பாளர் டி.இமான் உள்பட படக்குழுவினர்களும் 'விஸ்வாசம்' படத்தை பார்த்தனர். ஷாலினி அஜித் 'விஸ்வாசம்' படம் பார்க்க வந்த செய்தி அறிந்தவுடன் அந்த திரையரங்கு முன் அஜித் ரசிகர்கள் குவிந்தனர்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஷாலினியுடன் ஒருசில ரசிகர்கள் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.