close
Choose your channels

கனவு நனவாகிவிட்டது.. ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ஷாலின் ஜோயா..

Tuesday, October 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை நடிகை ஷாலின் ஜோயா காதலிப்பதாக கூறப்படும் நிலையில், சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்ல செய்தி பகிர்ந்ததையடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மலையாள திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நடித்து வரும் ஷாலின் ஜோயா, கலையரசன், 'ராஜா மந்திரி' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான 'கண்ணகி' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷாலின் ஜோயாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கின்றனர். அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் தனது கனவு நனவாகியுள்ளதாக கூறிய பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில் அவர் கூறியதாவது:

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவே எனக்கு பல ஆண்டுகளாக இருந்தது, அது தற்போது நனவாகியுள்ளது,. நான் சிறுவயதில் இருந்தபோது, பெரியவளாகி எப்படியாவது சம்பாதித்து புது வீடு வாங்க வேண்டும், பால்கனியுடன் கூடிய ஒரு சின்ன பிளாட் வாங்க வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. இப்போது சொந்த வீடு வாங்கிவிட்டேன்.

திருமணத்தைப் பற்றி நான் யோசித்ததே இல்லை. சொந்த வீடு என்பது எனக்கு ஒரு ரிட்டயர்மென்ட் பிளான் மாதிரி. இந்த பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி," என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஷாலின் ஜோயாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment