பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல அது ஆண்களுக்கும் உரியது என்பதற்கு தகுந்த விளக்கம் அளித்த எழுத்தாளர் சாலின் மரியா லாரன்ஸ்.
Send us your feedback to audioarticles@vaarta.com
பெண்களின் பிறப்புறுப்பில் கட்டமைக்கப்படுகிறதா கலாச்சாரம் என சமூகத்தில் நடக்கக்கூடிய பல அநீதிகளுக்கு குரல் எழுப்பிய எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் சாலின் மரியா லாரன்ஸ் அவர்கள், அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்
கூறியதாவது,
பெண்ணியம் பற்றிய புரிதல் எல்லாருக்குமே இருக்கா என்பதே சந்தேகமாக உள்ளது.சமீபத்தில் நடிகை த்ரிஷா பற்றி எழுந்த விமர்சனத்திற்கு த்ரிஷா பதில் அளித்தார்கள் அல்லவா ! உண்மையில் அதன் பெயர் தான் பெண்ணியம் . தனக்காக தன்னுடைய சுய மரியாதைக்காக நாம் பேசுவோமானால் அது தான் பெண்ணியம் .அவர் தான் பெண்ணியவாதி.
பகிரங்கமாக ஒரு பெண்ணை உடல் ரீதியாக நடத்தை ரீதியாக தாக்கி கொண்ட இருக்கும் போது,ஒரு பெண் தனக்காக எழுப்பும் கேள்விகளே இங்கு பெண்ணியம்.இங்க யாரும் நமக்கு அப்படியே சாதாரணமாக வந்து இந்தாங்க வெச்சிக்கோங்க என்று உரிமையை ஊட்டி விடல.
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பெண்களுக்கு கல்வி என்பதே கிடையாது . ஒடுக்கப்பட்டலர்களுக்கும் கிடையாது .அப்போது யாரோ ஒரு போராளி எடுத்துக்காட்டாக மகாத்மா புலே, சாவித்ரி பாய் மற்றும் பாத்திமா ஷேக் -யும் போராடி மோசமான வார்த்தைகளையும் அடியையும் வாங்கி தொடங்கப்பட்டதே இந்த கல்வி முறை .அதை வைத்து தான் இப்போது நான், நீங்க யாராக இருந்தாலும் கல்வியறிவு பெற்று உள்ளோம்.
முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி அவர்களுமே சண்டை போட்டு அவமானப்படுத்தப்பட்டு வாங்கி கொடுத்ததே இந்த மருத்துவ கல்வி.எனவே எல்லாமே இங்கு கஷ்டப்பட்டு தான் நாம் அடைந்துள்ளோம்.
1920இல் படித்தவர்களுக்கும் நிலம் வைத்துள்ளவர்களுக்கும் தான் ஓட்டு உரிமை கொடுக்கப்பட்டது.அந்த சமயத்தில் டாக்டர் அம்பேத்கர் அதற்காக நின்று பேசி அந்த ஓட்டுரிமையை நமக்காக வாங்கிகொடுத்தார்.
அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகு பரஸ்பர ஒற்றுமை இல்லையெனில் விவாகரத்து உரிமையையும் வாங்கி கொடுத்து உள்ளனர்.இதுவும் பெண்களுக்கு கிடைத்த ஒரு பெரிய நல்ல உரிமை மற்றும் உதவி ஆகும் .இது அனைத்தும் இந்து சட்ட மசோதாவில் அம்பேத்கர் கொண்டு வந்த உரிமைகள்.
பெண்ணியம் வேண்டாம் என்பதும், பெண்ணியவாதியை வெறுப்பதும் எல்லாமே ஒரு வகையில் அறிவற்ற செயல் ஆகும். படித்தவர்களும் இப்படி சொல்லி கொண்டு அலைந்தால் அப்போ இன்னும் அவர்களுக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்று அர்த்தம்.நடக்கும்போது புரியும் .
இரண்டாவது பெண்ணியம் என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல. அது ஆண்களுக்கும் உரியது. நானே என் எழுத்தின் மூலம் சொல்லி இருப்பேன்."பொட்டத்தனம் தப்பில்லை" என்று .ஒருவர் உங்களை பார்த்து பொம்பளை என்று சொன்னால் நீங்கள் அவமானப்படாதீர்கள். ஏனென்றால் பெண்கள் குடித்து விட்டு தெருவில் உருள போவதில்லை.பகிரங்கமாக யாரையும் விமர்சனம் செய்வதில்லை.
தெருவில் நின்று சண்டை போடுவதில்லை. டீ கடையில் நின்று புரளி பேசுவதில்லை. தேடி போய் சென்று போதையில் கற்பழிப்பதில்லை.எனவே ஆணை பார்த்து பெண் என்று கேலி செய்தால் அவமானப்பட ஒன்றுமே இல்லை.சந்தோஷப்படுங்கள்.
அதே போல் ஒரு பெண் தண்ணிச்சையாக முடிவு செய்து சொந்தக்காலில் நிற்கலாம் என்று வேலைக்கு போனால் அவள் கெட்டு போய் விடுவாள் என்ற அசிங்கமான கருத்து ஒன்று உள்ளது. நாங்கள் என்ன பிரியாணியா ? கெட்டு போவதற்கு ! ஒரு குடும்பத்தை சரியாக கொண்டு வர ஆணும் பெண்ணும் சேர்ந்து உட்கார்ந்து பேசி பொருளாதார வளர்ச்சியை பற்றிய முடிவெடுப்பதும் ஒரு வகையான பெண்ணியம் தான் .
பெண்ணியம் என்பது ஒரு அழகான கருத்தியல் தான்.நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் நமக்கான புரிதல் உள்ளது. என பெண்ணியம் பற்றியும் , பெண்களின் நிலை பற்றியும் மிகவும் தெளிவான உரையை அளித்தார் எழுத்தாளர் சாலின் மரியா லாரன்ஸ்.மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout