வதந்தி பரப்புபவர்களை தூக்கி போட்டு அடிக்க வேண்டும்: கொரோனாவால் இறந்ததாக கூறப்பட்ட நடிகர் ஆவேசம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் இறந்துவிட்டதாக தன்னை பற்றி வதந்தி பரப்பியவர்களை தூக்கி போட்டு அடிக்க வேண்டும் என பிரபல நடிகர் ஒருவர் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
90களில் பிரபலமாக இருந்தவர் நடிகர் முகேஷ் கண்ணா என்பதும், இவர் சக்திமான், மகாபாரதம் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து 90களின் கிட்ஸ்களின் சூப்பர் ஹிரோவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் முகேஷ் கண்ணா கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
இந்த வதந்தியை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் பதட்டம் அடைந்த நிலையில் உடனடியாக முகேஷ் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், ‘தான் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவும் இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் ரசிகர்களின் ஆசீர்வாதத்தால் எந்த வித உடல்நல கோளாறும் இன்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments