2021 இல் குறிக்கோளே இதுதான்… பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் தற்போது ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் மேலும் உற்சாகமாகி இருக்கும் இவர் தற்போது கோவாவில் முகாமிட்டு விதவிதமான போட்டோ ஷுட்டை நடத்தி வருகிறார். அதுகுறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதில் அவர் வெளியிட்டு உள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் தற்போது படு வைரலாகி இருக்கிறது. அதோடு அவர் தெரிவித்து உள்ள செய்திதான் மேலும் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது. 2021 இல் தன்னை நேசிப்பர்களுக்கு மீண்டும் மீண்டும் அன்பையும், அதோடு மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் தன்னை உணர வைப்பதும்தான் எனது நோக்கமே எனக் கூறி இருக்கிறார்.
மேலும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதனால் என் மீது நிபந்தனையற்ற அன்பை வைத்த ரசிகர்களுக்கும் எனது நன்றி எனத் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே தமிழில் காலா, விஸ்வாசம் படத்தில் நடித்த சாக்ஷி தற்போது புரெவி மற்றும் சமுத்திரக்கனியுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஒரு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com