ஷகிலாவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் கவர்ச்சி நடிகை என்ற இமேஜ் மாறி, ‘ஷகிலா அம்மா’ என்ற இமேஜுக்கு மாறியவர் நடிகை ஷகிலா என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷகிலா குறித்து சில திடுக்கிடும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அவரது ரசிகர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். இதுகுறித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

தன்னைப்பற்றி வெளியான ஒரு தவறான செய்தி முற்றிலும் வதந்தி என்றும், நான் தற்போது மகிழ்ச்சியாகவும் உடல் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன் என்றும் அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் என்னைப் பற்றிய வதந்தி பரவிய உடன் ஏராளமானோர் தனக்கு போன் செய்து நலம் விசாரித்ததாகவும் அவர்கள் அனைவருக்கும் தனது நன்றி என்றும், குறிப்பாக இந்த அன்பை தெரிந்து கொள்ள வைத்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் தனது நன்றி என்றும் ஷகிலா தெரிவித்துள்ளார். ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.