என் படம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கடும்: ஷகிலா
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 80களில் ஆபாச படங்களில் நடித்து வந்த ஷகிலா லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று இருந்தார் என்பதும் முன்னணி நடிகர்கள் படங்கள் கூட ஷகிலாவின் படங்களால் வசூல் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகை ரிச்சா சதா என்பவர் ஷகிலா கேரக்டரில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை இயக்கினர் இந்திரஜித் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் கலந்துகொண்ட ஷகிலா கூறியதாவது:
என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் படத்தில் இல்லை, படத்தில் முழுமையாக சொல்லவும் முடியாது. இந்த படத்தில் சொல்ல முடியாத பல வேதனைகள் என் மனதில் ஒளிந்துள்ளன. கணவர் குடும்பம் குழந்தை என எனக்கும் வாழ ஆசைதான். ஆனால் திருமணம் என்ற பெயராலும் நான் ஏமாற்றப்பட்டதால் எந்த பெண்ணும் என்னை போல் ஏமாந்து விடக்கூடாது என்றும், என் படம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும் என்றுதான் இந்த படத்தை எடுக்க நான் சம்மதித்தேன். இந்த படத்தை பார்த்துவிட்டு என் மீது யாரும் பரிதாப்பட வேண்டாம், விழிப்புணர்வுடன் இருந்தாலே போதும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆபாச நடிகை என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த ஷகிலா தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அவருடைய இமேஜே முற்றிலும் மாறிவிட்டது என்று கூறலாம். தற்போது அவருக்கு ஆயிரக்கணக்கான பெண் ரசிகர்களும் உள்ளனர் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments