திரைப்பட விமர்சகர்கள் எல்லோரும் நாட்டுக்கே தேவையில்லாதவர்கள்: ஷகிலா
- IndiaGlitz, [Thursday,January 20 2022]
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒரு கவர்ச்சி நடிகை என்ற தனது இமேஜை மாற்றிக் கொண்டவர் நடிகை ஷகிலா என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வின் நடித்து வெளியாகியுள்ள ’என்ன சொல்லப் போகிறாய்’ படம் குறித்து தனது கருத்தை ஷகிலா தெரிவித்துள்ளார்.
’என்ன சொல்ல போகிறாய்’ படம் நன்றாக இருக்கிறது என்றும், இந்த படம் நன்றாக இல்லை என்று சொன்னால் உங்கள் கண்களில் தான் தவறு இருக்கிறது என்றும், அஸ்வின் மிகவும் அழகாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடித்துள்ளார் என்றும், அதேபோல் படத்தில் உள்ள இரண்டு ஹீரோயின்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றும் ஷகிலா கூறியுள்ளார்.
அஸ்வின் 40 படங்களை நான் புறக்கணித்து இருக்கிறேன் என்று சொல்லி உங்கள் வாயில் அவல் தந்துவிட்டார் என்றும், அதனால் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு அவரை விமர்சனம் செய்கிறீர்கள் என்றும், ஒரு படத்தைத் குறை சொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் படத்தை விமர்சனம் செய்கிறேன் என்று இஷ்டத்திற்கு பேசக்கூடாது என்றும் விமர்சனம் செய்பவர்கள் இந்த நாட்டுக்கே தேவையில்லாதவர்கள் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை ஒரு முறை தான் பார்க்க முடியும் என்று கூறியவர்களுக்கு நான் ஒரு கேள்வியை கேட்கிறேன், ஒரு படத்தை எல்லோரும் ஒருமுறை தான் பார்ப்பார்கள். திரும்ப திரும்ப வேலை ஒரே படத்தை பார்க்க எல்லாரும் வேலைவெட்டி இல்லாதவர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு உள்பட எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன அதைப்பற்றியே விழிப்புணர்வை செய்யுங்கள், தேவையில்லாத வேலையை பார்க்க வேண்டாம் என்று ஷகிலா கூறியுள்ளார்.