அட்ஜெஸ்ட்மெண்டுக்கு நடிகைகள் ஒப்புக் கொண்டு தான் செல்கிறார்கள்: ஷகிலா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை கடந்த சில நாட்களாக தீவிரமாக விவாதம் செய்யப்பட்டு வரும் நிலையில், நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒப்புக்கொண்டு தான் செல்கிறார்கள் என்று நடிகை ஷகிலா சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை ஷகிலா இது குறித்து கூறிய போது ’நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு திரையுலகில் உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரையுலகில் மிக அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பாலிவுட்டை பொருத்தவரை நடிகைகளுக்கு தொல்லை இருக்காது என்றும் அவர்கள் உடனே நண்பர்களாக மாறி விடுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் அங்கு நெப்போட்டிசம் அங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஒரு நடிகையை ஒரு திரைப்படத்தில் புக் செய்யும் போதே நடிகையின் மேனேஜரிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி விடுவார்கள் என்றும் இதற்கு ஒப்புக் கொண்டால் தான் அந்த படத்தில் நடிகை நடிக்க முடியும் என்றும், நடிகையும் அதற்கு ஒப்புக்கொண்டு தான் படத்தில் கமிட் ஆவார் என்றும் ஷகிலா தெரிவித்தார்.
முக்கால்வாசி படம் முடிந்த பிறகு தன்னை அந்த படத்தில் இருந்து நீக்க முடியாது என்று என்ற பின்னர் தான் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள் என்றும் இதன் காரணமாகத்தான் பல பிரச்சனைகள் வருகிறது என்றும் அவர் கூறினார்.
பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பார்கள், நடிகைகளும் ஒப்புக்கொண்டு தான் போவார், வாய்ப்பு கொடுத்து விட்டால் பிரச்சனை இல்லை, வாய்ப்பு கிடைக்காத போது தான் நடிகைகள் இதை பிரச்சினையாக்குகிறார்கள்’ என்று ஷகிலா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com