ஊரடங்கு நேரத்தில் ஷகிலாவின் தாராள மனம்: பொதுமக்கள் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷகீலா என்றாலே 90களின் கிளாமர் நடிகை என்ற இமேஜ் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மாறி, தற்போது அவரை அனைவரும் ஷகிலா அம்மா என்று அழைத்து வரும் அளவுக்கு அந்த நிகழ்ச்சி அவரை முற்றிலும் மாற்றிவிட்டது என்றால் அது மிகையில்லை.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷகிலா தற்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாக சாலையோரம் இருக்கும் பொது மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பசியால் வாடி வருவதை அறிந்த ஷகிலா அவர்களுக்காக உணவு பொட்டலங்களை விநியோகம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளர்.
இந்த பதிவின் கேப்ஷனாக, ’உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில் ஒன்றை உங்களின் உதவிக்காக வைத்துக் கொள்ளுங்கள் என்றும் இரண்டாவது கையை மற்றவர்களின் உதவிக்காக பயன்படுத்துங்கள் என்றும் ஷகிலா கூறியுள்ளார். மேலும் உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் ஷகிலாவின் இந்த தாராள மனதிற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout