குக் வித் கோமாளி: இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இருவர், எலிமினேட் ஆனவர் யார் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது
நேற்றும் இன்றும் நடைபெறும் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் இருவர் மற்றும் எலிமினேட் ஆகும் ஒருவர் தேர்வு செய்யப்படுகின்றனர். இன்று மாலை ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி கோமாளி நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது
அதன்படி இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் நபர் கனி என்று நடுவர்கள் தேர்வு செய்தனர். இதனை அடுத்து அஸ்வின் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றார். இதனை அடுத்து கனி, அஸ்வின் ஆகிய இருவருக்கும் சக போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் வாழ்த்து தெரிவித்தனர்
இந்த நிலையில் பாபா பாஸ்கர் மற்றும் ஷகிலா ஆகிய இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என்ற நிலையில் இருவருக்கும் வைத்த போட்டியில் பாபா பாஸ்கர் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதனை அடுத்து இந்த வாரம் ஷகிலா எலிமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் அடுத்த வாரம் நடைபெறும் வைல்ட்கார்ட் சுற்றில் ஷகிலா உள்பட இதுவரை எலிமினேட் ஆன மதுரை முத்து, தீபா, தர்ஷா, பவித்ரா, ஆகிய அனைத்து போட்டியாளர்களும் இடம்பெறுவார்கள் அதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com