close
Choose your channels

எனது இளையமகள் இவர்தான்: ஷகிலாவின் நெகிழ்ச்சியான அறிவிப்பு!

Saturday, April 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் விரைவில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெறும் என்பதும் தெரிந்ததே.

அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பதும் விரைவில் இறுதி போட்டி நடைபெற்று இதில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் செலிபிரிட்டி வாரம் நடைபெறுகிறது. இந்த செலிபிரிட்டி வாரத்தில் ஒவ்வொரு குக்-ளும் தங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைத்து வந்துள்ளார்கள். ஷகிலா தன்னுடைய மகள் மிலாவையும், கனி தன்னுடைய தங்கை நிரஞ்சனாவையும், தீபா தன்னுடைய உறவினரையும், பவித்ரா தன்னுடைய நண்பரையும், தர்ஷா தன்னுடைய அம்மாவையும், மதுரை முத்து தன்னுடைய நண்பர் ஆதவனையும், அஸ்வின் தன்னுடைய நண்பர் சாண்டி மாஸ்டரையும், ரித்திகா தனது அம்மாவையும் அழைத்து வந்துள்ளார்கள்

இந்த நிலையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது திடீரென பவித்ரா அழத்தொடங்கினார். இதனை அடுத்து புகழ் உள்பட அனைவரும் பதறி போய் ’ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது ’எல்லோரும் உறவினர்களுடன் வந்திருக்கின்றார்கள் என்றும் அதனால் தனக்கு அம்மா ஞாபகம் வந்து விட்டதாக கூறினார். பவித்ராவின் அம்மா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வரமுடியவில்லை என்பதால் அவர் வருத்தத்தில் கண்ணீரிவிட்டார்.

இதனை அடுத்து இந்த இறுக்கமான சூழ்நிலையை மிகச் சரியாக புரிந்து கொண்ட செஃப் வெங்கடேஷ்பட், உடனே ’தற்போது ஷகிலா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்’ என்று கூறினார். உடனே ஷகிலா நேராக பவித்ராவிடம் சென்று ’மிலா தனது மூத்த மகள் என்றால், பவித்ரா என்னுடைய இளைய மகள் என்றும், நீ யாரும் இல்லை என்று கவலைப்படாதே, நான் இருக்கிறேன் உனக்கு அம்மாவாக’ என்றும் ஷகிலா கூறியது அனைவரையும் நெகழ்ச்சிப்படுத்தியது. இதனையடுத்து பவித்ரா, ஷகிலாவை கட்டியணைத்து கொண்ட காட்சி ரசிகர்களையும் உருக வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment