ஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை!
Send us your feedback to audioarticles@vaarta.com
வங்கத்தேசத்தில் தற்போது டாகா பிரிமியர் டி20 லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் விளையாடிய ஷகிப் அல் ஹசன் விளையாட்டிற்கு நடுவே கிரிக்கெட் ஸ்டெம்பை எட்டி உதைத்தும், நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
வங்கத்தேசத்தில் டாகா பிரிமியர் டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முகமதியன் ஸ்போட்ஸ் அணி மற்றும் அபகனி லிமிடெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு போட்டி தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. முதலில் டாஸ் வென்ற முகமதியன் அணி 145 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அபகனி அணி, களம் இறங்கியது. இதையடுத்து முகமதியன் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்து வீசத் தொடங்கினார். அப்போது அவர் போட்ட ஒரு பந்திற்கு நடுவரிடம் LPW கேட்கிறார். ஆனால் நடுவர் ஹசனுக்கு எந்த பதிலும் கூறவில்லை.
இதனால் கோபம் அடைந்த ஹசன் அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டெம்பை காலில் எட்டி உதைக்கிறார். அதோடு இந்தப் போட்டியின் 5.5 ஓவரில் மழை வருகிறது. 6 ஓவர்களை நிறைவு செய்யாததால் யார் வெற்றிப் பெற்றார்கள் என்பது அறிவிக்கப் படவில்லை. இன்னும் ஒரு பந்து வீசப்பட்டு இருந்தால் போட்டியின் முடிவை அறிவித்து இருக்கலாம். ஆனால் இப்படி செய்யாத நடுவர் அனைவரையும் பொலிவியனுக்குப் போகச் சொல்கிறார்.
இதனால் கோபம் அடைந்த ஹசன் மீண்டும் ஸ்டெம்பை தனது கைகளாலேயே பிடுங்கி அதைத் தூக்கி வீசுகிறார். அதோடு நடுவரிடம் கடும் விவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்தை எதிர்க்கொண்டது. இதனால் ஹசன் நடுவர்களிடமும் போட்டிக் குழுக்களிடமும் மன்னிப்பு கோரினார்.
தற்போது ஹசன் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பிறகும் சர்வதேச அளவில் இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது கிரிக்கெட் விளையாட்டுக்கு அழகல்ல எனப் பலரும் ஹசன் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இதனால் வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் ஹசன் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் சிலர் கருத்துக் கூறி வருகின்றனர்.
This is a proper recording of Bangladesh national cricketer #ShakibAlHasan's antics on the pitch.
— Soumyadipta (@Soumyadipta) June 11, 2021
He has since apologized for his behavior.
But the question is: Will the Bangladesh Cricket Board let him go with just an apology?pic.twitter.com/IqkfOFzQQ3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout