உண்மை தெரியாம பேசாதீங்க… Unsold வீரரின் மனைவி கோபத்தில் கொந்தளித்த சம்பவம்!
- IndiaGlitz, [Thursday,February 17 2022] Sports News
பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய முன்னணி வீரரான ஷகிபுல் ஹசன் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் விலைபோகவில்லை. இதனால் அவரைப் பற்றிய மீம்ஸ்களும் கிண்டல்களும் சமூகவலைத் தளங்களில் அதிகரித்ததைத் தொடர்ந்து இதற்கு முக்கியமான காரணம் இருப்பதாக அவரது மனைவி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரைக்கும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் எடுக்கவே முன்வரவில்லை. ஆனாலும் பங்களாதேஷ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிபுல் ஹசன் திறமையான வீரர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றே கருதப்பட்டு வந்தது.
முன்னதாக கொல்கத்தா அணியில் 2 சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது அந்த அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார். மேலும் கடந்த 2018 இல் ஹைத்ராபாத் அணியிலும் பின்னர் கேகேஆர் அணியிலும் இடம்பெற்று விளையாடிவந்த இவர் இதுவரை 71 போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும் 793 ரன்களையும் குவித்துள்ளார்.
இந்நிலையில் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஏலத்தில் எந்த ஐபிஎல் அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் ஷகிபுல் ஹசனை பற்றிய மீம்ஸ்கள் வைரலான நிலையில் இதைப் பார்த்து கடும்கோபம் கொண்ட அவரது மனைவி உம்மி அஹ்மது ஷிஷிர் இரண்டு ஐபிஎல் அணிகள் ஷகிபுல்லை தொடர்ந்து கொண்டு பேசியபோது இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்த முடியுமா என்று கேட்டிருந்தார்கள்.
ஆனால் இலங்கைக்கு எதிரான போட்டித்தொடரில் பங்களாதேஷ் பங்கேற்ப இருப்பதால் முழு போட்டியிலும் என்னால் கவனம் செலுத்த முடியாது எனக் கூறிவிட்டார். இந்தக் காரணத்திற்காகத்தான் ஐபிஎல் அணிகள் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. மேலும் இந்த ஆண்டு இல்லையென்றால் என்ன? அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம்.
ஒருவேளை இலங்கை தொடரை அவர் கைவிட்டு அவர் ஐபிஎல் விளையாட வந்திருந்தால் நீங்கள் இப்படி பேசுவீர்களா? தேசத்துரோகி என முத்திரைக் குத்தியிருக்க மாட்டீர்கள். உங்களின் தீய ஆசைகள் மீது என் கணவர் தண்ணீர் ஊற்றிவிட்டார் மன்னித்துவிடுங்கள் என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதில் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.