நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்துட வேண்டாம்: 'ஷகிலா' பிரஸ்மீட்டில் ஷகிலா
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள திரையுலகின் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ’ஷகிலா’ . இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இன்று சென்னையில் ’ஷகிலா’ படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் நடிகை ஷகிலா கலந்து கொண்டு பேசினார். அவர் இந்த விழாவில் பேசிய போது, ‘என்னைப் பற்றி யாராவது தவறாக கூறினால் நான் அதனை பெரிதாக நினைத்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால் என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்தது இல்லை. அதனால் தான் நான் அதை பற்றி கவலைப்படவில்லை
நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை இனி வரும் நடிகைகளும், படித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களும் செய்யக்கூடாது என்ற ஒரு மெசேஜை இந்த படத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் அதைத்தான் கூறியுள்ளேன். இந்த மெசேஜ் பெண்களுக்கு போய் சேர்ந்தாலே எனக்கு திருப்திதான்
இந்த படத்தில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை இணைத்து உள்ளார்கள். ஆனால் சொல்ல வரும் விஷயம் இதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஷகிலா கூறியுள்ளார்
#Shakeela film press meet. Chennai...#Shakeela #ShakeelaTrailer @RichaChadha @TripathiiPankaj @DoneChannel1 pic.twitter.com/RRi1eK84Qk
— meenakshisundaram (@meenakshinews) December 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments