நான் ஏமாந்தது போல் எந்த பெண்ணும் ஏமாந்துட வேண்டாம்: 'ஷகிலா' பிரஸ்மீட்டில் ஷகிலா

  • IndiaGlitz, [Friday,December 18 2020]

மலையாள திரையுலகின் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ’ஷகிலா’ . இந்த திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று சென்னையில் ’ஷகிலா’ படத்தின் பிரஸ்மீட் நடந்தது. இதில் நடிகை ஷகிலா கலந்து கொண்டு பேசினார். அவர் இந்த விழாவில் பேசிய போது, ‘என்னைப் பற்றி யாராவது தவறாக கூறினால் நான் அதனை பெரிதாக நினைத்து கவலைப்படுவதில்லை. ஏனென்றால் என் முன்னாடி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்தது இல்லை. அதனால் தான் நான் அதை பற்றி கவலைப்படவில்லை

நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நான் என்னுடைய வாழ்க்கையில் செய்த தவறுகளை இனி வரும் நடிகைகளும், படித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களும் செய்யக்கூடாது என்ற ஒரு மெசேஜை இந்த படத்தின் மூலம் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். நான் என்னுடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்திலும் அதைத்தான் கூறியுள்ளேன். இந்த மெசேஜ் பெண்களுக்கு போய் சேர்ந்தாலே எனக்கு திருப்திதான்

இந்த படத்தில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை இணைத்து உள்ளார்கள். ஆனால் சொல்ல வரும் விஷயம் இதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று ஷகிலா கூறியுள்ளார்

More News

விமானத்தில் இருந்து விழுந்தும் நொறுங்காத மொபைல்… எது தெரியுமா???

2 அடி தூரத்தில் இருந்து விழுந்தாலே போதும் நமது செல்ல மொபைல் போன்கள் பலத்த அடி வாங்கும்.

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு?

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக

ஹலோ துபாயா? மார்க் இருக்காரா? யாரை கலாய்க்கிறார் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையும், 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவருமான கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த'

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதிக்காது… விளக்கம் அளிக்கும் தமிழக அரசு!!!

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்தது.

ஒரு வருடமா கடலில் மிதந்த ரூ.600 கோடி மதிப்பிலான கொக்கைன்… பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

பசிபிக் தீவு அருகே உள்ள மார்ஷல் தீவு அருகே கடந்த செவ்வாய்கிழமை அன்று 649 கிலோ மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது.