மகள் குறித்து முதல்முறையாக மனம் திறந்த ஷகிலா!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஷகிலா மலையாளத் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார் என்பதும் அவருடைய திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளியானால் கூட தோல்வி அடையும் என்றும் அந்த அளவிற்கு ஷகிலாவின் படங்கள் வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஒரு கட்டத்தில் மலையாள திரையுலகில் இருந்து ஒதுக்கப்பட்ட ஷகிலா, அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்து வந்தார். தற்போது அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் அந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கவர்ச்சி நடிகை என்ற இமேஜிலிருந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அவரை ’அம்மா’ என்று மாற்றி விட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜட்ஜ்கள் உள்பட அனைவரும் அவரை ’ஷகிலா அம்மா’ என்று தான் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஷகிலாவின் மகள் மிளா குறித்து சமீப காலமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஷகிலாவுக்கு திருமணமே ஆகவில்லை என்றாலும் அவர் ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதும் அவர் தான் மிளா என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனது மகள் மிளா குறித்து ஷகிலா முதல்முறையாக கூறிய சில விஷயங்கள் ரசிகர்களை நெகழ்ச்சி அடையச் செய்துள்ளது. நான் மிளா என்ற பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவர் ஒரு ஆடை வடிவமைப்பாளர். என்னுடைய மகளாகவே அவரை நான் வளர்ந்து வருகிறேன். அவர் இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய ஏற்றத்தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர் அவர் ஒருவர்தான். அதேபோல் அவருடைய ஏற்றத்தாழ்வுகளில் நான் அவருக்கு துணையாக இருந்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார். மகள் குறித்து உணர்வுபூர்வமாக ஷகிலா கூறிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments