நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த ஷாருக்கான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஜவான்’ திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் நிலையில் ’நயன்தாராவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என விக்னேஷ் சிவனுக்கு ஷாருக்கான் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியான ’ஜவான்’ படத்தின் டிரைலரில் நயன்தாரா அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் ’ஜவான்’ படத்தின் டிரைலருக்கு வாழ்த்துக்களை விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்த நிலையில் அதற்கு ஷாருக்கான் பதில் அளித்துள்ளார்.
அதில் ’உங்கள் அன்புக்கு நன்றி, நயன்தாரா மிகவும் அருமையானவர்.. ஆனால் அவர் தற்போது அடிக்கவும் உதைக்கவும் கற்றுக் கொண்டார், அதனால் அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள், ஏற்கனவே உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்’ என்று ஜாலியாக குறிப்பிட்டுள்ளார்
இந்த ஜாலியான ட்விட்டிற்கு பதில் அளித்துள்ள விக்னேஷ் சிவன், ‘ஆமாம் ஜாக்கிரதையாக தான் இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில் அவர் காதல் மன்னனிடம் இருந்து நல்ல ரொமான்ஸ் செய்யவும் கற்றுக் கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
😆 soooo kind of you sir 😇😇❤️
— VigneshShivan (@VigneshShivN) July 12, 2023
Yes sir being very careful 🫡 but I also heard there is some good romance between the both of you in the movie , that she has learnt from the king of romance 🥰 , so already cherishing that with the happiness of such a dream Debut with YOU #SRK… https://t.co/hqOSBI3YUF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com