ஒரே ஆண்டில் மூன்று ரூ.1000 கோடி படங்களா? ஷாருக்கானுக்கு எகிறும் மார்க்கெட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் வெளியானது. இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஷாருக்கான் நடித்த இன்னொரு திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் 1050 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனை அடுத்து ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது இந்த படமும் நிச்சயம் 1000 கோடி ரூபாய் வசூலை பெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை இந்த ஆண்டு கொடுத்த ஷாருக்கான் அடுத்ததாக ’டங்கி’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த படமும் வெற்றி பெற்று 1000 கோடி ரூபாய் வசூல் செய்தால், ஒரே ஆண்டில் மூன்று ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படத்தை கொடுத்த ஒரே நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
’டங்கி’ திரைப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக டாப்ஸி நடித்து இருக்கும் நிலையில் இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments