அம்மா தயாரிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் மகன்.. அப்பா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அம்மா தயாரிப்பில் மகன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் குறித்து அறிவிப்பை அப்பா மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் சார்பாக கௌரி கான் தயாரிப்பில் உருவாக இருக்கும் வெப் தொடரை தான் ஆரியன் கான் இயக்க உள்ளார் என்பதும் இந்த தொடர் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் - கெளரிகான் தம்பதிகளின் மகன் ஆரியன் கான் நடிகராக அறிமுகம் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் ’புதிய கதை சொல்லும் முறை, கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்கின்மை, தைரியமான காட்சிகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கொண்ட கதை அம்சம் ஆகியவையோடு மக்களை மகிழ்விக்க ஆர்யன் கான் வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஷாருக்கானின் மகள் சுஹானா கான் படமும் நெட்ப்ளிக்ஸில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Witness Bollywood like never before… on Netflix! 🔥
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) November 19, 2024
Presenting Aryan Khan’s directorial debut in an all-new series, coming soon!@gaurikhan @iamsrk #AryanKhan @RedChilliesEnt @NetflixIndia pic.twitter.com/UMGTb5FVGI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com