தளபதி விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த அட்லி!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் இந்தி டிரைலர் நேற்று வெளியானதை அடுத்து இந்த ட்ரைலரை பார்த்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் அவர் அட்லியையும் குறிப்பிட்டுள்ளதை அடுத்து அட்லீ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டதாக கூறப்படுகிறது .

தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் டிரைலரை பார்த்த ஷாருக்கான் இந்த டிரெய்லரை அட்லியுடன் சேர்ந்து பார்த்தேன் என்றும் ட்ரெய்லர் மிகவும் சூப்பராக இருக்கிறது என்றும் அட்லி என்னைவிட விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’லயன்’ திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் அதற்கு முள்ளிப்புள்ளி வைக்கும் விதமாக ’பீஸ்ட்’ படத்தின் வாழ்த்தில் அட்லியுடன் இருப்பதை ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளதால் ‘லயன்’ திரைப்படம் டிராப் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

இந்த நிலையில் ‘லயன்’ படம் டிராப் இல்லை என்பதையும் ’பீஸ்ட்’ பட டிரைலரை ஷாருக்கானை பார்க்க வைத்து விஜய்யின் அடுத்த படத்திற்கு சிக்னல் கொடுத்துள்ளதையும் பார்க்கும்போது அட்லி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துவிட்டதாக திரையுலகினர் கூறி வருகின்றனர்.

 

More News

சென்னையில் 'தளபதி 66' பட பூஜை: யார் யார் கலந்து கொண்டார்கள்?

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 66' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது என்பதும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது

மொட்டைத் தலையுடன் புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை… பதறிப்போன ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாக்களில் அறியப்படும் நடிகையாக வலம்வரும் நடிகை சஞ்சனா கல்ராணி திடீரென மொட்டைத் தலையுடன்

திருமண தேதியை அறிவித்த நட்சத்திரக் காதல் ஜோடி… குஷியில் ரசிகர்கள்!

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட்- ரன்பீர் கபூர் இருவரும்

ராஷ்மிகா மந்தனாவை அடுத்து 'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மாஸ் மகராஜாவுடன் விஷ்ணு விஷால்: மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் ரவி தேஜா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்