தளபதி விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த அட்லி!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் இந்தி டிரைலர் நேற்று வெளியானதை அடுத்து இந்த ட்ரைலரை பார்த்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் அவர் அட்லியையும் குறிப்பிட்டுள்ளதை அடுத்து அட்லீ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டதாக கூறப்படுகிறது .

தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ படத்தின் டிரைலரை பார்த்த ஷாருக்கான் இந்த டிரெய்லரை அட்லியுடன் சேர்ந்து பார்த்தேன் என்றும் ட்ரெய்லர் மிகவும் சூப்பராக இருக்கிறது என்றும் அட்லி என்னைவிட விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’லயன்’ திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் அதற்கு முள்ளிப்புள்ளி வைக்கும் விதமாக ’பீஸ்ட்’ படத்தின் வாழ்த்தில் அட்லியுடன் இருப்பதை ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளதால் ‘லயன்’ திரைப்படம் டிராப் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

இந்த நிலையில் ‘லயன்’ படம் டிராப் இல்லை என்பதையும் ’பீஸ்ட்’ பட டிரைலரை ஷாருக்கானை பார்க்க வைத்து விஜய்யின் அடுத்த படத்திற்கு சிக்னல் கொடுத்துள்ளதையும் பார்க்கும்போது அட்லி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துவிட்டதாக திரையுலகினர் கூறி வருகின்றனர்.