close
Choose your channels

தமிழ் நடிகை தான் ஹீரோயின்.. ஷாருக்கான் செய்த பரிந்துரை.. விட்டதை பிடித்துவிட்டாரா?

Sunday, July 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான் தனது முந்தைய படத்தின் நாயகியாக தமிழ் நடிகையை பரிந்துரை செய்த நிலையில் அப்போது அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அதே நடிகையை பரிந்துரை செய்த நிலையில் அந்த நடிகை விட்ட இடத்தை பிடித்து விட்டதாகப்படுகிறது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது நடிகை சமந்தா தான். ஆனால் அப்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால் அந்த படத்தை மிஸ் செய்தார். அதன் பிறகு தான் அந்த படத்தில் நயன்தாரா நடித்தார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகிய ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ஷாருக்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படத்தில் நாயகியாக சமந்தாவை, ஷாருக்கான் பரிந்துரை செய்ததாகவும் இதனை இயக்குனரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து சமந்தா இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்த சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஷாருக்கான் மற்றும் ராஜ்குமார் ஹிரானி இணைந்த ’டங்கி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment