'ஜவான்' ஓடிடி ரிலீஸ் தேதி.. நாளை தியேட்டரில் பார்த்தால் ஒரு சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1100 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’ஜவான்’ திரைப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 2ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது
இந்த நிலையில் நாளை அதாவது அக்டோபர் 13ஆம் தேதி தேசிய சினிமா தினம் என்பதால் நாளை ’ஜவான்’ படத்தை திரையரங்குகளில் பார்த்தால் டிக்கெட் விலை ரூபாய் 99 மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஷாருக்கானின் ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகிபாபு, அம்ரிதா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.
99 reasons why you surely shouldn't miss watching Jawan this 13th October...
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) October 12, 2023
It's #NationalCinemaDay 😎🔥
So, hurry up, book your tickets now! 🎟️https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/sD0X2w4iAn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments