ஐபிஎல் கேகேஆர் அணியில் யோகிபாபு? ஷாருக்கான் விடுத்த அழைப்பு..!

  • IndiaGlitz, [Friday,September 01 2023]

சமீபத்தில் யோகிபாபுவை சிஎஸ்கே அணியில் இணைத்துக்கொள்ள தல தோனி சம்மதம் தெரிவித்த நிலையில் தற்போது கேகேஆர் அணியில் யோகிபாபுவை இணைத்துக்கொள்ள ஷாருக்கான் சம்மதம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தோனி தயாரிப்பில் உருவான ’எல்ஜிஎம்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது ஐபிஎல் சிஎஸ்கே அணியில் யோகி பாபுவை இணைத்துக் கொள்ள சம்மதம் என்றும், ஆனால் அதே நேரத்தில் யோகிபாபு மேட்ச் விளையாடும் நேரத்தில் கால்ஷீட் சரியாக கொடுக்க வேண்டும் என்றும் பிராக்டிஸ் செய்வதற்கு வரவேண்டும் என்றும் அவருக்கு சம்மதம் என்றால் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசுவதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் பந்து பேச்சாளர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்து போட மாட்டார்கள் என்றும் பேட்ஸ்மேனை நோக்கி தான் பந்து போடுவார்கள் என்றும் அதை சமாளிக்கும் திறன் யோகிபாபுவுக்கு இருந்தால் தாராளமாக அவர் சிஎஸ்கே அணிக்கு வரலாம் என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் தோனியை அடுத்து தற்போது ஷாருக்கானும் தனது கேகேஆர் ஐபிஎல் அணிக்கு யோகிபாபுவை அழைத்துள்ளார். சமீபத்தில் ’ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது தொகுப்பாளினி பாவனா ’கடந்த மாதம் தோனி, யோகிபாபுவை சிஎஸ்கே அணியில் விளையாட தல தோனி அழைப்பு விடுத்தார், நீங்கள் அவரை உங்கள் கேகேஆர் டீமில் விளையாட அழைப்பு விடுப்பீர்களா? என்று கேட்டபோது ஷாருக்கான் தம்ஸ் அப் காட்டி சம்மதம் தெரிவித்தார். இது குறித்த புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

மாலத்தீவில் விடுமுறையை கழிக்கும் தமன்னா.. வேற லெவல் புகைப்படங்கள்..!

நடிகை தமன்னா சமீபத்தில் விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் மாலத்தீவு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

சம்பளத்துக்கு மேல் ஷேர்.. 'ஜெயிலர்' வெற்றியால் ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய தொகை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டி 600 கோடி ரூபாய் என்ற இலக்கை நோக்கி சென்று

'தளபதி 68' படத்தின் அடுத்த சம்பவம்.. வெங்கட் பிரபு பகிர்ந்த மாஸ் புகைப்படங்கள்..!

தளபதி விஜய் நடிக்கும் 68வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்பதையும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் அடுத்த ஒரிஜினல் சீரிஸ்.. நடிகர் கிருஷ்ணா தயாரிப்பில் “பாராசூட்”

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் “பாராசூட்” சீரிஸை கோலாகலமாக அறிவித்துள்ளது!!

'டிடி ரிட்டர்ன்ஸ்' உள்பட 3 தமிழ் படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

இந்த வாரம் திரையரங்குகளில்  சந்தானம் நடித்த 'கிக்' வெளியாக இருக்கும் நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிடி ரிட்டர்ன்ஸ்'  நாளை ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ளது.