நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா எந்த ஹீரோவும் என் முன்னாடி நிக்க முடியாது: 'ஜவான்' வீடியோ

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஷாருக்கானின் அசத்தலான டபுள் ஆக்சன் கேரக்டர்கள், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம் மற்றும் வில்லன் விஜய் சேதுபதி ஆக்ரோஷமான நடிப்பு ஆகியவை அடங்கிய இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்களை கேட்கும்போது படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பின்வரும் வசனங்கள் மாஸ் ஆக உள்ளது.

நான் யாரு? யாராயிருக்கும்? தெரியலையே.. நான் புண்ணியமா? இல்ல பாவமா? ஹீரோவா? இல்லைனா வில்லனா? இந்த கேள்வி எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.. இந்த கேள்விக்கு பதிலா உள்ளுக்குள்ளே வச்சுக்கிட்டு என்கிட்ட தேடுனா எப்படி? ஏன்னா நீங்க தான் நான்

’இது வெறும் ஆரம்பம் தான் இனிமே தான் ஆட்டமே’

’நான் வில்லனா முன்னாடி வந்து நின்னா, எந்த ஹீரோவும் என் முன்னாடி நிக்க முடியாது ராஜா’

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஷாருக்கானுக்கு ஏற்ற ஒரு மாஸ் திரைப்படமாக இந்த படம் நிச்சயம் அமையும் என்றும் கூறப்பட்டு வருகிறது

ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிய இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.