close
Choose your channels

ஷாருக்கானின் 'ஜவான்' ரிலீஸ் தேதி மாற்றம்.. அதிகாரபூர்வ தகவல்..!

Saturday, May 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படம் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷாருக்கான் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த ஷாருக்கான் இந்த படம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான், உள்பட பல நடித்த இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில், ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment