ஷாருக்கானின் 'ஜவான்' ரிலீஸ் தேதி மாற்றம்.. அதிகாரபூர்வ தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,May 06 2023]

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படம் ஜூன் இரண்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷாருக்கான் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவித்த ஷாருக்கான் இந்த படம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான், உள்பட பல நடித்த இந்த படத்தில் சஞ்சய் தத் மற்றும் தீபிகா படுகோன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில், ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.. விவாகரத்துக்கு போட்டோஷூட் எடுத்த நடிகை பேட்டி..!

கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைத்ததற்கு போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய நடிகை ஷாலினி சமீபத்தில் அளித்த பேட்டியில் நான் செய்த தவறை தயவு செய்து யாரும் செய்து விடாதீர்கள் என்று கூறி இருப்பது

'வணங்கான்' படத்தில் இருந்து விலகியது ஏன்? சூர்யா-பாலா இடையே என்ன பிரச்சனை: கீர்த்தி ஷெட்டி

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாகி வந்த நிலையில் திடீரென இந்த படம் நிறுத்தப்பட்டது என்பதும் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியது

விஜய் - கோபிசந்த் படத்தை தயாரிப்பது யார்? ஆச்சரியமான தகவல்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

'கழுவேத்தி மூர்க்கன்' ரிலீஸ் எப்போது? அருள்நிதி தகவல்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருள்நிதி நடித்து வரும் 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துவிட்டது.

மெரினா உட்பட அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி.. முழு விவரங்கள்..!

சென்னை மெரினா கடற்கரை உட்பட அரசு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி