'ஜவான்' படத்தின் ஒரு வார வசூல் தகவல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’ஜவான்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் வசூலும் குவிந்தது.
இந்த படம் ஒரே நாளில் 129 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் நான்கு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்த நிலையில் சற்றுமுன் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் ஒரு வார வசூல் ரூ.660.03 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் ரூ.1000 கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் அட்லி மற்றும் ஷாருக்கானுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
A storm called Jawan has taken over the world!🔥
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 14, 2023
Book your tickets now: https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/K5J7XuMHRI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments