'ஜவான்' படத்தின் ஒரு வார வசூல் தகவல்.. ரூ.1000 கோடியை நெருங்குமா?

  • IndiaGlitz, [Thursday,September 14 2023]

ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’ஜவான்’ திரைப்படம் கடந்த 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் வசூலும் குவிந்தது.

இந்த படம் ஒரே நாளில் 129 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் நான்கு நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்த நிலையில் சற்றுமுன் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் ஒரு வார வசூல் ரூ.660.03 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் ரூ.1000 கோடியை நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் அட்லி மற்றும் ஷாருக்கானுக்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சனாதனத்திற்கு ஆதரவு தெரிவித்த கஸ்தூரி: சத்யராஜ் மகள் திவ்யா கடும் விமர்சனம்..!

சனாதனத்திற்கு ஆதரவாக பேசிய நடிகை கஸ்தூரியை சத்யராஜ் மகள் திவ்யா  கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மறப்போமா.. மறப்போமா.. கணவரை இழந்தபின் நிம்மதியை தேடி காட்டுக்குள் செல்லும் சீரியல் நடிகை..!

சீரியல் நடிகை சுருதி சண்முகப்பிரியாவின்  கணவர் சமீபத்தில் மறைந்த நிலையில் அந்தத் துக்கத்தை  மறப்பதற்காக கணவருடன் அவர் சென்ற இடத்திற்கு மீண்டும் சென்று  தன்னை அந்த துக்கத்திலிருந்து

'லியோ' படத்தில் கெளதம் மேனனுக்கு இந்த கேரக்டரா? சரியான சம்பவம் இருக்குது..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்

காட்டுக்குள் போனாலும் போவேன், பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன்: தமிழ் நடிகை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று கூறப்பட்ட நடிகை ஒருவர் 'காட்டுக்குள் சென்றாலும் செல்வேனே தவிர, பிக் பாஸ் வீட்டுக்குள்

ஒரே படத்தில் 4 பிக்பாஸ் தமிழ் பிரபலங்கள்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு..!

ஒரே படத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான்கு போட்டியாளர்கள் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து பட குழுவினர் கேக் வைத்து கொண்டாடியுள்ளனர்