ஷாருக்கானுடன்  மோதும் பான் - இந்திய நடிகரின் படம்.. 3வது ரூ.1000 கோடிக்கு சிக்கலா?

  • IndiaGlitz, [Tuesday,September 26 2023]

ஷாருக்கான் நடித்த ’பதான்’ மற்றும் ’ஜவான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த ’டங்க்கி’ என்ற திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தின விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென பான் - இந்திய நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ திரைப்படம் அதே கிறிஸ்துமஸ் தின விருந்தாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’சலார்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் ஷாருக்கானின் 1000 கோடி ரூபாய் வசூலுக்கு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்த 'கேஜிஎப்’ படம் ஷாருக்கானின் ’ஜீரோ’ படத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு மோதியது என்பதும், ’ஜீரோ’ படத்தை விட 'கேஜிஎப்’ மிக அதிக வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உயிர் மற்றும் உலகு உடன் ரொமான்ஸ்.. விக்கி-நயன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் உயிர் மற்றும் உலகு ஆகிய இரட்டை குழந்தைகளுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

லைகாவுக்கு சென்றது தனுஷின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்.28ல் படம் ரிலீஸ்.. ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரபலம்..!

ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'தளபதி 68' படத்தில் 3வது முறையாக இணையும் இரட்டையர்கள்.. பூஜை எப்போது?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படத்தின் ரிலீஸ் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் ஆரம்பகட்ட

'விடாமுயற்சி' படப்பிடிப்பு தேதி.. அஜித்துடன் நடிக்கும் 4 முன்னணி நட்சத்திரங்கள்..!

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தின் அறிவிப்பு வெளியாகி கடந்த சில மாதங்கள் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருந்தன.