ஷாருக்கானுடன் மோதும் பான் - இந்திய நடிகரின் படம்.. 3வது ரூ.1000 கோடிக்கு சிக்கலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கான் நடித்த ’பதான்’ மற்றும் ’ஜவான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் நடித்த ’டங்க்கி’ என்ற திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தின விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென பான் - இந்திய நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிக்கும் ’சலார்’ திரைப்படம் அதே கிறிஸ்துமஸ் தின விருந்தாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’சலார்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதால் ஷாருக்கானின் 1000 கோடி ரூபாய் வசூலுக்கு சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்த 'கேஜிஎப்’ படம் ஷாருக்கானின் ’ஜீரோ’ படத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு மோதியது என்பதும், ’ஜீரோ’ படத்தை விட 'கேஜிஎப்’ மிக அதிக வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com