உங்கள் மகள் மட்டும் காவி பிகினி அணியலாமா? பிரபல இயக்குனரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த ’பதான்’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் காவி உடையில் ஆபாசமான உடை தீபிகா படுகோனே அணிந்திருந்ததாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பாஜகவினர், இந்து அமைப்பினர் மட்டுமின்றி திரை உலகில் உள்ள சிலரே இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் என்பதும் அவர்களில் ஒருவர் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி என்று இயக்குனரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷாருக்கான் ரசிகர்கள் தற்போது விவேக் அக்னிகோத்ரிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். விவேக்கின் மகள் மல்லிகா காவி நிறத்தில் பிகினி அணிந்த உடையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்து ’உங்கள் மகள் மட்டும் காவி பிகினி அணியலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து மல்லிகா தனது சமூக வலைத்தள பக்கத்தை பிரைவேட் கணக்காக மாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி விவேக் அக்னிகோத்ரி இயக்கிய ’ஹேட் ஸ்டோரி’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடிகைகள் மேலாடை இல்லாமல் நடித்து இருந்தார்கள் என்பதும் அவரது முந்தைய படங்களில் உள்ள ஆபாச காட்சிகளை குறித்து ஷாருக்கானின் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ’பதான்’ திரைப்படம் பாலிவுட் திரையுலகையே இரண்டாக பிரித்து விட்டது என்றுதான் கூறவேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com