close
Choose your channels

நீங்கள் என்னை பழி வாங்கலாம், ஆனால் அதை மட்டும் உங்களால் செய்ய முடியாது: விஜய்சேதுபதிக்கு ஷாருக்கான் பதிலடி..!

Thursday, August 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் ஷாருக்கான் கலகலப்பாக பேசினார்.

இந்த படத்தில் நடித்த ஒவ்வொருவர் குறித்து அவர் ஒரே வார்த்தையில் பேசும் போது ’அட்டகாசமான விஜய் சேதுபதி’ ’கலகலப்பான யோகி பாபு’ ’வசீகரமான நயன்தாரா’ ’வித்தைக்காரன் அனிருத்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் ரஜினி, விஜய் மாதிரி எல்லாம் நான் நடனம் ஆட மாட்டேன் என்று நடன இயக்குனர் சோபியிடம் சொன்னேன் என்றும் எனக்கேற்றவாறு நடனம் அமைத்துக் கொடுங்கள் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற ஒரு விழாவை தான் பார்த்ததில்லை என்றும் இந்த விழாவை நடத்த அனுமதி தந்த கல்லூரி நிர்வாகத்திற்கு தனது நன்றிகள் என்றும் தெரிவித்தார்.

மேலும் தான் சில தமிழ் படங்களில் நடித்து உள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். குறிப்பாக கமல்ஹாசனின் 'ஹேராம்’ மற்றும் ரஜினியுடன் ’ரா ஒன்’ ஆகிய படங்களில் நடித்ததையும் குறிப்பிட்ட ஷாருக்கான் மணிரத்னம் இயக்கத்தில் ‘உயிரே’ படத்தில் நடித்தபோது தமிழ் சினிமாவிலிருந்து பல விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்

மேலும் விஜய் சேதுபதி பேசிய போது ஷாருக்கான் பழிவாங்க விரும்பினேன் என்று கூறியதற்கு பதிலடி கொடுத்த ஷாருக்கான் ’நீங்கள் என்னை பழி வாங்கலாம், ஆனால் என் பெண் ரசிகர்களை உங்களால் வாங்க முடியாது’ என்று நகைச்சுவையாக கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment