ரெண்டு பேருமே ஒத்துக்கிட்டாங்க.. அப்ப அட்லியின் அடுத்த படம் ரூ.2000 கோடி வசூலா?

  • IndiaGlitz, [Sunday,November 12 2023]

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிக்க இருப்பதை அடுத்து அந்த படம் 2000 கோடி வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்லி கூறியபோது, ‘விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் இணைத்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சீரியசாக ஒரு திட்டத்தை போட்டு வருகிறேன். இருவருக்கும் பொருத்தமான கதையையும் தேர்வு செய்து வருகிறேன். அனேகமாக அது எனது அடுத்த படமாக கூட இருக்கலாம். விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவருமே எனது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். அவர்கள் எனக்கு ஊக்கத்தையும் அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

எனவே அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் நடந்தால் இந்த படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

நான் வேற மாதிரி பேசுவேன்.. மாயாவிடம் திடீரென கோபப்பட்ட கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடு பரபரப்பாக இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மாயா

தீபாவளி வாழ்த்துக்களுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட நயன்தாரா.. இணையத்தில் வைரல்..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் தீபாவளி வாழ்த்துக்களுடன் தனது அடுத்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கமல் சார் இன்னும் ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கணும்: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வனிதா..!

வுமன் சேப்டி குறித்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய போது கமல்ஹாசனும் சேர்ந்து சொல்லி ஆதரவு அளித்திருக்கணும் என்றும், ஆனால் அவர் சொல்லவில்லை என்று வனிதா கூறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மாயா கேப்டன்சி குறித்து கானா பாலா சொன்ன நச் பதில்.. யாருமே பாராட்டாத கேப்டன்..!

கடந்த வாரம் மாயா கேப்டன் ஆக இருந்த நிலையில் மாயாவின் கேப்டன்ஷிப் எப்படி இருந்தது என்று கமல்ஹாசன் கேட்கும்போது அதற்கு சக போட்டியாளர்கள் சொல்லும் பதில் குறித்த ப்ரோமோ

தீபாவளி படங்களை அடுத்து சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தீபாவளி திருநாளை முன்னிட்டு நேற்று முன் தினம்,, கார்த்தியின் 'ஜப்பான்' கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா 2' மற்றும் விக்ரம் பிரபு நடித்த ''ரெய்டு' ஆகிய மூன்று படங்கள் வெளியானது