ஒரே ஸ்க்ரீனில் ஷாருக்கான் - பிரபாஸ்.. ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!

  • IndiaGlitz, [Wednesday,August 30 2023]

ஒரே ஸ்கிரீனில் ஷாருக்கான் மற்றும் பிரபாஸ் தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே உள்பட பலர் நடிப்பில், அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’ஜவான்’. இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரபாஸ் நடித்த பிரம்மாண்டமான திரைப்படம் ’சலார்’. இந்த படத்தின் டிரைலர் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் ’சலார்’ படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஒரே திரையில் ஷாருக்கான் மற்றும் பிரபாஸை பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.