பிரமாண்டத்தின் உச்சம்.. பிரமிக்கும் ஆக்சன் காட்சிகள்: அட்லியின் 'ஜவான்' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டு நிமிடத்திற்கு மேலாக ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானா, அவன் அடுத்தடுத்த போர்ல தோத்துகிட்டு இருந்தானா, நல்ல பசி வேற, தோத்துப்போன வெறியில பயங்கர கோபத்தில் காட்டுல சுத்திகிட்டு இருந்தானா’’ என்ற வசனத்துடன் டிரைலர் ஆரம்பமாகிறது.
போலீஸ் மற்றும் வில்லன் என இரண்டு விதமான கேரக்டரில் ஷாருக்கான் நடித்திருப்பது ட்ரெய்லர் எழுந்து தெரிய வருகிறது. அதே போல் ஷாருக்கானை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நயன்தாரா நடித்திப்பதும் தெரிய வருகிறது. அதேபோல் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருப்பதும் இந்த டிரைலரில் இருந்து தெரிய வந்துள்ளது.
ஷாருக்கானுக்கு இரட்டை வேடம் என்றால் விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் இரண்டு விதமான கெட்டப். அதாவது இளமையான மற்றும் முதுமை தோற்றத்தில் கொண்ட கெட்டப்களில் தோன்றுகிறார். நான் தான் உலகிலேயே நான்காவது பெரிய ஆயுத விற்பனை வியாபாரி. இப்படி நான் கஷ்டப்பட்டு உருவாக்குன சாம்ராஜ்யத்தின் அடிமடியை ஒருத்தன் கைவச்சான்னா, அதை சுலபமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று விஜய் சேதுபதி பேசும் வசனம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
அப்பா ஷாருக்கானுக்கும் இளமையான விஜய்சேதுபதிக்கும் உள்ள மோதல், மகன் ஷாருக்கானும் விஜய்சேதுபதிக்குமான மோதலாக மாறுகிறது. மேலும் ’புள்ள மேல கைய வைக்கிறதுக்கு முன்னாடி அவன் அப்பன தொட்றா பாக்கலாம் என்ற ஆவேசமான பஞ்ச் வசனம் டிரெலரின் சிறப்பம்சம்.
அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசை, ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதியின் அபாரமான நடிப்பு, அட்லியின் விறுவிறுப்பான திரைக்கதை, பிரம்மாண்டமான காட்சிகள் என டிரைலரை பார்க்கும்போது அனைத்துமே பாசிட்டிவ்வாக இருப்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பது உறுதியாகி உள்ளது
நீதி மற்றும் ஒரு ஜவான்
— Shah Rukh Khan (@iamsrk) August 31, 2023
பெண்கள் மற்றும் அவர்களின் பழிவாங்குதல்
ஒரு தாய் மற்றும் ஒரு மகன்
நிறைய மஜா தருணங்கள்
Ready ahhh?#JawanTrailer இப்போது வெளியாகி உள்ளது!
Needhi matrum oru Jawan
Pengal matrum avargalin Pazhivanguthal
Oru Thai matrum oru magan
Neraya maja tharunangal… pic.twitter.com/8oI5DrUwkr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments