close
Choose your channels

ஷாருக்கான் படத்தில் விஜய்யா? விஜய் படத்தில் ஷாருக்கானா? பரபரப்பு தகவல்!

Wednesday, November 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக இன்னொரு செய்தி வெளிவந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷாருக்கான், நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரே ஒரு நாள் மட்டும் அவர் கால்சீட் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர்கள் உறுதி செய்யவில்லை

இந்த நிலையில் தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் தரப்பில் இருந்து ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏற்கனவே ’தளபதி 67 படத்தில் சஞ்சய்தத், ஆக்சன் கிங் அர்ஜூன், கௌதம் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன், மிஷ்கின் உட்பட பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஷாருக்கானும் இணைவதாக வெளி வந்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment